Sunday, July 11, 2010

.கோவையில் இன்று கண்ணதாசன் விழா

கோவை: இயல் தமிழிலும் கலைத் துறையிலும் முத்திரை பதிப்பவர்களுக்கு கோவை கண்ணதாசன் கழகம் சார்பில், கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

விழாவில், வண்ணதாசன் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. கோவை கண்ணதாசன் கழகம் சார்பில், கண்ணதாசன் விழா கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு கொண்டாடப்படுகிறது. மரபின்மைந்தன் முத்தையாவின் "கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம்' என்ற நூலை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி பெற்றுக்கொள் கிறார். மரபின்மைந்தன் முத்தையா ஏற்புரையாற்றுகிறார். காலை 11.00 மணிக்கு, "கவியரசு கண்ணதாசனின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் - சந்தோஷ கானங்களே! வாழ்வியல் ஞானங்களே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. "சந்தோஷ கானங்களே' என கவிஞர் உமாமகேஸ்வரி, மகேஸ்வரி, கவிஞர் இளங்கோவன் ஆகியோரும், "வாழ்வியல் ஞானங்களே' என ஆத்தூர் சுந்தரம், புலவர் குப்புலிங்கம், கனகலட்சுமி ஆகியோரும் வாதாடுகின்றனர். மாலை 5.45 மணிக்கு, பிரியதர்ஷினியின் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, வண்ணதாசன் மற்றும் பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது; விருதை பண்ணாரியம்மன் குழும நிறுவனங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம் வழங்குகிறார். முனைவர் ஜெயந்தஸ்ரீ வாழ்த்திப் பேசுகிறார். விழாவில் "திருவோடுகளில் தங்கக்காசு வீசியவன்' என்ற தலைப்பில், நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றுகிறார். சீனிவாசன் வரவேற்கிறார்; பாலதண்டாயுதம் நன்றி கூறுகிறார்---தினமலர் 

No comments:

Post a Comment