Saturday, July 17, 2010

ரெசிடென்சியில் உணவு திருவிழா


அவிநாசி ரோட்டிலுள்ள ரெசிடென்சி ஓட்டலில் "10 இன்கார்நேஷன்ஸ்' என்ற உணவுத் திருவிழா நேற்று துவங்கியது; வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. ரெசிடென்சி ஓட்டல்களின் தலைமை சமையற்கலை நிபுணர் மனோகர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்துக்கென்று ஒவ்வொரு சிறப்பான உணவு உண்டு. ரெசிடென்சி ஓட்டலில் நடத்தப்பட்ட உணவுத் திருவிழாவில், குறிப்பி ட்ட உணவு வகைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்நிலையை மாற்றி உணவுத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தின் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் உணவுத்திருவிழாவில், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாபி, கேரளா, பெங்காலி, லக்னோ, டில்லி, தமிழ்நாடு, கோவா, ஐதராபாத் என பத்து மாநிலங்களில் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் இடம்பெறும். இன்று(நேற்று) கர்நாடகாவின் உணவு வகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பத்து நாட்களும் ஒவ்வொரு மாநிலத்தின் உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படும். வாரநாட்களில் இரவு 7.00 முதல் 11.00 மணி வரையும், ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் மதியம் 12.00 முதல் மாலை 4.00 மணி வரை மற்றும் இரவு 7.00 முதல் 11.00 மணி வரையும் உணவுத் திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க பெரியவர்களுக்கு 500 ரூபாயும், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மனோகர் தெரிவித்தார்.--DINAMALAR

No comments:

Post a Comment