Friday, July 30, 2010

Is it possible?

போதிய கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், கோவையில் தேசிய நிர்வாகவியல் மேலாண்மை மையம்(ஐஐஎம்) அல்லது உலகத் தரத்தில் பல்கலை. அமைக்கவேண்டும் என்று கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசுக்கு, முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இதையேற்று கோவை, திருவாரூரில் உலகத்தரத்திலான பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.திருவாரூரில் மத்திய பல்கலைகழகம் செயல்பட துவங்கியுள்ளது. கோவையில் பல்கலை. அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனாலும், பல்கலைக்கழகத்துக்கு மாநில அரசு குறைந்தது 100 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியது.கோவை மாநகரில் போதிய இடவசதி இல்லாததால், புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, அவிநாசி சாலைகளில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒரே பகுதியில் போதிய நிலம் கிடைக்கவில்லை. அதேபோல், கோவையில் வேளாண் ஏற்றுமதி முனையம் அமைக்க, மாநில வேளாண் அமைச்சகம் தீவிரம் காட்டியது. இதற்கும் 100 ஏக்கர் நிலம் தேவை. 3 ஆண்டாக முயற்சித்தும், இன்னும் இடம் கிடைக்கவில்லை. இதுபற்றி வருவாய் அதிகாரிகள் கூறியதாவது: உலகத் தரத்திலான பல்கலைகழகம், வேளாண் ஏற்றுமதி முனையம் அமைக்க, தனியாரிடம் இருந்துதான் நிலங்களை வாங்கவேண்டும். ஆனால், கோவையில் நில மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த நிதியும், நிலத்துக்கே போதாது என்ற நிலை உள்ளது. இதனால், வேளாண் ஏற்றுமதி முனையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகத்தர பல்கலைகழகத்துக்கும் கோவையில் இடம் கிடைப்பது சிரமம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்-Dinakaran

No comments:

Post a Comment