Thursday, December 2, 2010

About Kovai's Le Meridien

 ஓட்டல் துறையில் புகழ் பெற்று விளங்கும் லீ ராயல் மெரிடியன் ஓட்டல் போன்று கோவையிலும் ரூ. 300 கோடியில் லீ மெரிடியன் ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. அதை டிச.12ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டலான லீ ராயல் மெரிடியன் ஓட்டல் அதிபர் பழனி ஜி.பெரியசாமி நேற்று (நவ.30) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது;

ஓட்டல் துறையில் புகழ் பெற்று விளங்கும் லீ ராயல் மெரிடியன் ஓட்டல் போன்று கோவையிலும் ரூ. 300 கோடியில் லீ மெரிடியன் ஓட்டலை கட்டி இருக்கிறோம். கோவை விமான நிலையம் அருகே அவினாசி ரோட்டில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் 9 மாடிகளுடன் கூடிய இந்த ஓட்டல் நவீன தொழில்நுட்ப டிசைன்களுடன் கட்டப்பட்டுள்ளது.

சென்னைக்கு வெளியே கட்டப்பட்டுள்ள முதல் 5 நட்சத்திர ஓட்டல் என்ற பெருமை இந்த ஓட்டலுக்கு கிடைத்துள்ளது. இங்கு நீச்சல் குளம், ஹெல்த் கிளப், மினி தியேட்டர், 2 ஆயிரம் பேர் அமரும் கூட்ட அரங்குகள் என அனைத்து வசதிகளும் உள்ளது. சி.டி. கொண்டு வந்தும் படம் பார்க்கலாம். நீச்சல்குளம் முதல் மாடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில கலாச்சாரத்திற்கு ஏற்ப சூட் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சூட், தமிழக கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக இருக்கும். 

டிச.12ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவையில், லீ மெரிடியன் ஓட்டல் திறப்பு விழா நடக்கிறது. மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தலைமையில் முதலமைச்சர் கருணாநிதி ஓட்டலை திறந்து வைக்கிறார்.

இதில் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, சுரேஷ்ராஜன், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், சாந்தலிங்க அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்பட முக்கிய பிரமுகர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.

No comments:

Post a Comment